இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன்…07.03.2019

07-03-2019 வியாழக்கிழமை விளம்பி வருடம் மாசி மாதம் 23ம் நாள் வளர்பிறை. பிரதமை திதி இரவு 11.20 மணி வரை பிறகு துவிதியை. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 8.32 மணி வரை பிறகு உத்திரட்டாதி.

நல்ல நேரம் 9-12, 4-7, 8-9.
எமகண்டம் காலை மணி 6.00-7.30.
இராகு காலம் மதியம் மணி 1.30-3.00.
குளிகை: 9 – 10.30
சூலம்: தெற்கு.

பொது: சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை
பரிகாரம்: நல்லெண்ணெய்.மேஷம்:

எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். பழைய சொந்தங்கள் தேடிவருவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார்.

வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். இனிமையான நாள்.

ரிஷபம்:

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புது திட்டங்கள் நிறைவேறும் நாள்.

மிதுனம்:

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும்.வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். சாதிக்கும் நாள்.

கடகம்:

மதியம் 2 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள்.

மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.

சிம்மம்:

குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப்போகும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மதியம் 2 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கன்னி:

எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார்.வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் அதிசயிக் கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

துலாம்:

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும்.பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

விருச்சிகம்:

நீண்ட நாளாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு:

கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

மகரம்:

உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். பயணங்கள் சிறப்பாக அமையும்.நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

கும்பம்:

மதியம் 2 மணி வரைராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள்.வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.

மீனம்:

கணவன்-மனைவிக்குள் வீண் வாக்குவாதம் வந்து நீங்கும். சகோதரவகையில் சங்கடங்கள் வரும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மதியம் 2 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானம் தேவைப்படும் நாள்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்