இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன்…(02.03.2019)

02-03-2019 சனிக்கிழமை விளம்பி வருடம் மாசி மாதம் 18ம் நாள்.

தேய்பிறை ஏகாதசி திதி பிற்பகல் 1.40 மணி வரை பிறகு துவாதசி. பூராட நட்சத்திரம் காலை 8.25 மணி வரை பிறகு உத்திராடம். யோகம்: சித்தயோகம்.

நல்ல நேரம் 7-8, 10.30-1, 5-8, 9-10.
எமகண்டம் மதியம் மணி 1.30-3.00.
இராகு காலம் காலை மணி 9.00-10.30.
குளிகை: 6:00 – 7:30.
சூலம்: கிழக்கு.
பொது: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
பரிகாரம்: தயிர்.மேஷம்:

உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப்பேசுவீர்கள். செயல்படுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள்.எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அகிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.

ரிஷபம்:

மதியம் 3 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக்கொண்டிருக்க வேண்டாம். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக்காட்டுவீர்கள்.வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.

மிதுனம்:

குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப்போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாரின் உடல் நிலை சீராகும். வி.ஐ.பிகள் உதவுவார்கள்.வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மதியம் 3 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்னெச்சரிக்கை தேவைப்படும் நாள்.

கடகம்:

சாதுர்யமாகவும், சமயோஜிதமாகவும் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வீட்டை புதுப்பிப்பது குறித்து யோசிப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள்.வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். அமோகமான நாள்.

சிம்மம்:

சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். புது நட்பு மலரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும்.வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். கனவு நனவாகும் நாள்.

கன்னி:

புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். மகளுக்கு நல்லவரன் அமையும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள்அதிகரிக்கும்.வெளியூரிலிருந்து நல்லசெய்தி வரும். வியாபாரத்தில் கணிசமாகலாபம் உயரும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்:

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள்.உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் ரெட் டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

விருச்சிகம்:

இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழிநடத்துவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.ஆடை,ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதுஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

தனுசு:

மதியம் 3 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள்.

வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். மாலைப்பொழுதிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.

மகரம்:

ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல், அடையலாம்.வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் 3 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

கும்பம்:

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.புதுத்தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். இனிமையான நாள்.

மீனம்:

உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத் துக்கொள்வீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள்.வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்