Huawei Mate X 5G மடித்துவைக்கும் தொலைபேசி அதிரடியாக அறிமுகம்..!

Huawei நிறுவனம் தனது முதல் 5G தொழில்நுட்பத்தைக் கொண்ட மடித்துவைக்கக்கூடிய ஸ்மார்ட்தொலைபேசியை கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக அறிமுகம் செய்துள்ளது.2019 Mobile World Congress ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.இந்த Mobile World Congress Huawei நிறுவனம் தனது 5G மற்றும் மடிப்பு வசதி கொண்டு தொலைபேசியை Mobile World Congress நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில், Huawei Mate X தொலைபேசியின் விளம்பர போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் Mate X மடித்து வைக்கும் 5G வசதியுடன் இருக்கும் என்றும் உறுதியாகியுள்ளது.கடந்த வாரம் ஐபோன் நிறுவனமும் தனது மடிப்பு Mobile தொலைபேசிக்கான வடிவமைப்புக்கு காப்புரிமை பெற்றுள்ளது.நவீன தொழில்நுட்பத்தில் தனது மடிப்பு தொலைபேசியை வடிவமைக்கும் ஆப்பிள் நிறுவனம் எதிரிவரும் 2020ஆம் ஆண்டில்தான் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனை வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, Samsung நிறுவனம் தனது Galaxy Fold மூலம் உலகின் முதல் மடிப்பு தொலைபேசியினை அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்