இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பலம் வாய்ந்த ஸ்கொட்லாந்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த கத்துக் குட்டி ஓமான்…!!

ஓமன் – ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அல் அமராத்தில் இன்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி ஓமன் அணி முதலில் களம் இறங்கியது. மொகமது நதிம், குர்ரம் நவாஸ் ஆகியோரின் பொறுப்பான அரை சதத்தால் 200 ஓட்டங்களை தாண்டியது.இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் ஓமன் அணி 8 விக்கெட் இழப்புக்கு 248 ஓட்டங்களை எடுத்தது.

ஸ்காட்லாந்து அணி சார்பில் சப்யான் ஷரீப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 249 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது ஸ்காட்லாந்து அணி.ஆனால், ஓமன் அணியினரின் சிறப்பான பந்து வீச்சில் சிக்கிய ஸ்காட்லாந்து அணி 155 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளை இழந்து 93 ஓட்டங்களினால் தோல்வியை தழுவியது.

ஓமன் அணி சார்பாக மொகமது நதிம், பாதல் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பிலால் கான், கலிமுல்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்