இலங்கை வாழ் மக்களுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி…நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை அதிகரிப்பு…!!

இலங்கையில் நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.நிதியமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயாலும்இ ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாயாலும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.இதற்கமைய இதுவரை 147 ரூபாயிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 152 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், இதுவரை 123 ரூபாயிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 129 ரூபாயிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும், இதுவரை 118 ரூபாயாகவிருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 126 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 99 ரூபாயிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்று 103 ரூபாயிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்