குழந்தை பெற்றுக்கொள்வது மகா பாவமாம்…!! வேகமாகப் பரவும் புதிய சர்ச்சையினால் பரபரப்பு…!

இன்றைய காலகட்டத்தில் புதிதாகத் திருமணம் செய்து கொள்ளும் புதிய தலைமுறையினர் சில ஆண்டுகளுக்கு குழந்தை பிறப்பதைத் தள்ளிப் போடுகின்றனர்.

இதற்கான காரணங்களை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொருவரின் பொருளாதார, குடும்ப சூழ்நிலைகள் அல்லது தனி விருப்பங்களைப் பொறுத்து இந்த முடிவு எடுக்கப்படுகிறது.ஆனால்,சமீபத்தில் இந்தியாவில் ஆண்டி நட்டாலிஷம் என்ற கருத்து பல இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகிறது. அந்தக் கருத்தில் மூல நோக்கமே இந்த உலகில் யாரும் எந்த உயிருக்கும் அதன் அனுமதியில்லாமல் உயிர் கொடுக்ககூடாது என்பது தான்.

என்ன ஒரே குழப்பமாக இருக்கிறதா? சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் பெறப்போகும் குழந்தையின் அனுமதியுடனேயே அந்தக் குழந்தையை நீங்கள் பெற வேண்டும் என்பது தான். இது மேலும் உங்களை குழப்புகிறதா?

தெளிவாக சொன்னால் நீங்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ளக்கூடாது உங்களுக்கு அதற்கான உரிமையில்லை என்பது தான்.அவர்கள் குழந்தைகள் இல்லாத சமூதாயத்தை உருவாக்க வேண்டும் என முழக்கமிடுகின்றனர். ஒரு உயிரை வற்புறுத்தி இந்த உலகிற்கு கொண்டு வருவது என்பது பெரும் குற்றமாக அவர்கள் கருதுகின்றனர்.

இந்தக் குழுவினர் எதிர்வரும்-10 ஆம் திகதி குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூருவில் போராட்டம் நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.இதற்கு எல்லாம் ஒரு படி மேலே போய் மும்பையை சேர்ந்த ரபேல் சாமுவேல் என்ற இளைஞர் தன் பெற்றோர் மீது தன்னை தனது அனுமதியில்லாமல் அவரது பெற்றோர்கள் பெற்றுள்ளனர் என வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது ‘ என் பெற்றோரை நேசிக்கிறேன். ஆனால், அவர்களின் மகிழ்ச்சிக்காக என்னைப் பெற்றெடுத்திருக்கிறார்கள். அதற்காக நான் பாதிக்கப்படவேண்டுமா? உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் தங்களின் விருப்பம் இல்லாமலே பிறக்கிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.இந்தப் புதிய விதமான தத்ததுவத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான் என்றாலும் இந்திய நாட்டின் எதிர்காலத்தைப் பெரிதாகப் பாதிக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

‘எதிர்கால இந்தியா’ என்பது இன்றைய மற்றும் எதிர்கால குழந்தைகளை நம்பித் தானிருக்கும் நிலையில் இது போன்ற பிரச்சாரம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் எதிர்வினையை ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்