டெங்கு காய்ச்சல் வராமல் இயற்கை முறையில் தடுப்பதற்கு சில வழிமுறைகள்..!

டெங்கு காய்ச்சல் என்பது ஒரு வைரஸ் தொற்று. இது ஆடேஸ் எனும் பெண் நுளம்பால் பரப்பப்படுகிறது. இந்த நுளம்பு கடித்து 3-14 நாட்களின் பினரே அறிகுறிகள் தென்படும். இந்தக் காய்ச்சல் குழந்தைகள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லா வயதினரையும் வெகுவாக பாதிக்கின்றது.காய்ச்சல் ஏற்பட்டதை இரத்த பரிசோதனையின் போது குருதிச் சிறுதட்டுக்கள் எண்ணிக்கை குறைவடையும் போது அதன் மூலம் உறுதி செய்து கொள்ளலாம். பொதுவாக இந்தக் காய்ச்சல் ஏற்படும் போது தலை வலி, மூட்டு வலி, தசைப் பிடிப்புக்கள், சரும நோய்கள், கண்களின் பின் புறத்தில் ஏற்படும் வலி, சோர்வு போன்ற பல அறிகுறிகளை அவதானிக்க முடியும்.

இந்தக் காய்ச்சல் உயிரையே குடிக்கும் அளவிற்கு ஆபத்தை ஏற்படுத்துவதனால் இதிலிருந்து நம்மை பாதுகாப்பது அவசியமானது. டெங்கு காய்ச்சலை வராமல் இயற்கை முறையில் தடுப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அவை:

1. பப்பாசி இலை:

பப்பாசி இலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குருதிச் சிறுதட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. இதில் காணப்படும் விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதுடன், அண்டிஒக்ஸிடன் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.பப்பாசி இலையை மசித்து சாற்றை பிளிந்து எடுத்து, தினமும் குடிக்க வேண்டும்.

2. பார்லி புல்.
பார்லி இரத்தத்தில் செல்களின் எண்ணிக்கையை அதிகரிகச் செய்வதன் மூலம் குருதிச் சிறுதட்டுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்யும். இதனை தேநீராகவோ அல்லது மென்பானங்களில் இதனை சேர்த்து உட்கொள்ளலாம்.

3. வேப்பிலை:

பல நோய்களிற்கு பயன்படுத்தும் வேப்பிலையை அரைத்து பானமாக அருந்துவதனால் குருதிச் சிறுதட்டுக்கள், வெள்ளையணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதுடன், நோய் எதிர்ப்பு திறனை வலிமைப்படுத்தும்.

4. தோடம்பழச் சாறு.

தோடம்பழச்சாற்றில் அதிகளவு அண்டிஒக்ஸிடன், விட்டமின்கள் இருப்பதனால் டெங்கு அஓயினால் ஏற்படும் அறிகுறிகளை குணப்படுத்தும். இது டெங்குக்கு எதிரான அண்டிபோடியை உருவாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

மேலும், அதிகளவு சிறுநீரை வெளியேற்ற உதவுவதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி விடும். இதில் காணப்படும் விட்டமின் சி செல்களை சரிசெய்கின்றது.தினமும் ஒரு கிளாஸ் வீட்டில் தயாரிக்கப்பட்ட தோடம்பழச் சாறு பருகுவது சிறந்தது.

5. துளசி.

துளசி இலையை சப்பி சாப்பிடுவதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, டெங்குவில் இருந்து பாதுக்காக்கலாம். பச்சையாக இலையை சாப்பிடலாம் அல்லது அதனி டீயில் பயன்படுத்தி அருந்தலாம்.

டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் நுளம்புகளை தடுப்பதற்கான சில வழிமுறைகள்.

மாலை நேர அரங்களில் வீட்டுக் கதவு, ஜன்னல்களை மூடி வைப்பதன் மூலம் நுளபுகள் வீட்டினுள் வருவதை தவிர்க்க முடியும்.

நுளம்பு கடிகளில் இருந்து பாதுகாப்பதற்கு உடலை மூடியவாறான ஆடைகளை அணிதல்.நுளம்பு விரட்டிகளை பயன்படுத்தல். இவை இரசாயணப் பொருட்களாலல் ஆனதால் சில நேரங்களில் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

அவ் வேளைகளில் வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்த கலவையை ஸ்பிறே செய்யலாம்.பூண்டினை நீரில் கொதிக்க வைத்து அதனை ஸ்பிறே செய்வதனால், அதன் மணத்தினால் நுளம்புகள் வருவதை தவிர்க்க முடியும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்