வேகமாகப் பரவும் போலித் தகவல்களால் ஒட்டுமொத்த இலங்கையர்களும் பெரும் குழப்பத்தில்…..!!

இலங்கையிலுள்ள அனைத்து வங்கி வலையமைப்பும் ஊடுருவப்பட்டுள்ளதாக இலங்கை பரிமாற்ற நிறுவனம் அறிவித்துள்ளது.சமூக வலைத்தளமான வட்ஸ்அப் மூலம் இவ்வாறான போலித் தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.“இலங்கை வங்கி கட்டமைப்பும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால், ATM அட்டையின் தகவல்கள் இணைய ஊடுருவிகளின் கைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால் வங்கியில் கணக்குகளிலுள்ள ATM அட்டைகளை செயலிழக்க செய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

இந்நிலையில் இலங்கையின் பிரதான இரண்டு வங்கி நிறுவனங்கள் ATM அட்டை கொடுக்கல் வாங்கல் மேற்கொள்வதனை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.” என வட்ஸ்அப் ஊடாக தகவல் பரவி வருகின்றது.

எனினும், இதுவொரு அடிப்படையற்ற போலியான செய்தி என இலங்கை பரிமாற்ற நிறுவனம் மறுத்துள்ளது.இலங்கையில் வங்கி கட்டமைப்புகள் எவையும் ஊடுருவப்படவில்லை. அவ்வாறு வட்ஸ்அப் தகவல்கள் கிடைத்தால் அதனை மற்றவர்களுக்கு பகிர்வதனை தவிர்க்குமாறு இலங்கை மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் சிலர் மற்றும் அமைப்புகள் இணைந்து ATM இயந்திரம் ஊடாக பணம் கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது.ATM இயந்திரங்களுக்கு அருகில் உபகரணம் ஒன்றை பொருத்தி அவற்றின் மூலம் தரவுகள் சேகரித்து ATM அட்டை தயாரிக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதனால் ATM இயந்திரங்கள் மூலம் பணம் எடுக்கும் போது மிகவும் அவதானமாக மேற்கொள்ளுமாறு கொடுக்கல் வாங்கல் மேற்கொள்பவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.அனைத்து வங்கிகளிலும் மக்கள் தமது சேமிப்பினை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் வங்கிகள் தொடர்பில் வெளிவரும் முரண்பாடான கருத்துக்களால் ஒட்டுமொத்த மக்களும் அச்சமடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்