இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன்…(05.02.2019)

05-02-2019 செவ்வாய்க்கிழமை விளம்பி வருடம் தை மாதம் 22-ம் நாள்.

வளர்பிறை. பிரதமை திதி மறுநாள் பின்னிரவு 4.31 மணி வரை பிறகு துவிதியை. அவிட்டம் நட்சத்திரம் இன்று முழுவதும். யோகம்: சித்தயோகம்.

நல்ல நேரம் 8-9, 12-1, 7-8.
எமகண்டம் காலை மணி 9.000-10.30.
இராகு காலம் மாலை மணி 3.00-4.30.
குளிகை: 12:00 – 3:30.
சூலம்: வடக்கு.

பொது: திருமெய்யம் ஆண்டாள் பிரியாவிடை எண்ணெய்க் காப்பு உற்சவாரம்பம், சூரியநயினார்கோவில் சிவபெருமான் பவனி.

பரிகாரம்: பால்.மேஷம்:

உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத்தொடங்குவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

ரிஷபம்:

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பாராதசந்திப்பு நிகழும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

மிதுனம்:

மாலை 7 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.

வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.

கடகம்:

கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும்.தாயாரின் உடல் நிலை சீராகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 7 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள்.

சிம்மம்:

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக்கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும்.வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்.உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி:

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள்.தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதுமைபடைக்கும் நாள்.

துலாம்:

எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.புது வேலை கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. நன்மை கிட்டும் நாள்.

விருச்சிகம்:

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள்.புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும்.உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்ததை முடிக்கும் நாள்.

தனுசு:

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். நேர்மறை எண்ணம் பிறக்கும்.நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

மகரம்:

மாலை 7 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள்.நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வார்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாலைப்பொழுதிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.

கும்பம்:

குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள்.திடீர் பயணங்கள் இருக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மாலை 7மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால்நிதானம் தேவைப்படும் நாள்.

மீனம்:

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்