பூமியிலிருந்து விரைவில் அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நகரம்…!!

துருக்கியில் உள்ள மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஹசன்கெய்ஃப் என்ற நகரம் பூமியிலிருந்து விரைவில் அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

சுமார் 600 ஆண்டுகள் பழமையான அல் ரிஸ்க் மசூதியின் மினார் உட்பட ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கலாசார பாரம்பரியமும், 12,000 ஆண்டுகள் முன்பு உருவாக்கப்பட்ட புதிய கற்காலக் குகைகளும் காணாமல் போய்விடுமென அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.புதிய நீர்மின்சார அணையொன்றை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள செயற்கை ஏரியொன்றின் காரணமாக ஏறத்தாழ 90 சதவீத ஹசன்கெய்ஃப் நகரம் மூழ்கிவிடும் நிலை தோன்றியுள்ளது.

தென்கிழக்கு துருக்கிக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும், நிர்பாசனத்திற்கும் ஏற்றவகையில் இந்த ஏரியின் நீர் அவசியம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.எனினும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான கலாசார பாரம்பரியமும், தொல்பொருட்களும் மறைந்து விடும் என்று விமர்சகர்கள் அஞ்சுகின்றனர்.

இது வரலாற்றை பற்றியது மட்டுமன்றி இயற்கையான நீர், விலங்குகள் மற்றும் தாவரங்களையும் அழிக்கிறார்கள் என்று ஹசன்கெய்ஃப் பாதுகாப்பு இயக்கத்தின் உறுப்பினர் ரித்வான் அயஹான் கூறுகிறார்.அணையின் நீர்மட்டம் உயர்ந்தால் சுற்றுச் சூழல் மாற்றமடையும், எனவே அணையின் நீர்மட்டத்தை குறைத்து நகரத்தின் தன்மையை பாதுகாப்பார்கள் என்று நம்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

1950 ஆம் ஆண்டளவில் டைக்ரிஸ் நதிக்கு குறுக்காக இலிஸூ அணைக் கட்டை அமைக்கும் திட்டத்தை துருக்கி ஆரம்பித்திருந்தது. ஆனால் சில சட்ட சிக்கல்கள் காரணமாக 2096 ஆம் ஆண்டு வரை அதன் பணி நிறைவடையாமல் இருந்தது.இடம்பெயர்ந்த உள்ளூர் குர்து மக்களுக்காக புதிய இடத்தில் இருப்பிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்ற போதும், பெரும்பாலான மக்கள் தங்களின் தலைவிதி என்னவென்று தெரியாமல் உள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்