தலையைப் பதம் பார்த்த பந்து…! மைதானத்தில் நிலைகுலைந்து விழுந்தார் திமுத் கருணாரத்ன!! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி…!!

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்து தலையில் தாக்கியதால், இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.கன்பெர்ரா மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் போது, அவுஸ்ரேலியா வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸ் வீசிய பந்து, திமுத் கருணாரத்னவின் தலையை தாக்கியது.

இதனால் வலியால் துடித்த அவர். மைதானத்தில் சரிந்தார். இதனையடுத்து அணி மருத்துவர் வந்து அவரை பரிசோதிக்க, பின்னர் மெடிகெப் வரவழைக்கப்பட்டு அவர் ஓய்வறைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.ஆனால், அவரது நிலை மோசமாக இருந்ததால், அவர் அருகில் உள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். எனினும், செல்லப்படுவதற்கு முன்னர், கண் விழித்து இருந்ததாக கூறப்படுகின்றது.

அவரின் நிலைக் குறித்து இன்னமும் உறுதியான தகவல்கள் இல்லாத நிலையில், தற்போது அவருக்கு மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.திமுத் கருணாரத்ன, 85 பந்துகளுக்கு 46 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையிலேயே களத்தை விட்டு வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்