பெண்கள் ஐஸ்கிறீமை இப்படித் தான் குடிக்க வேண்டும்…!! சமூக ஊடகங்களில் உருவான சர்ச்சை…!

எப்படி ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும்..?

துருக்கியில், ஒழுங்கு நடத்தைகள் குறித்த படிப்பு ஒன்றில் பெண்கள் ஐஸ்கிரீமை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டிருப்பது, சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.‘ஒரு பெண்ணாக எப்படி இருக்க வேண்டும்’ என்ற பாடம் இஸ்தான்புல்லின் பழமைவாத பக்சிலர் நகராட்சியால் ஒருங்கிணைக்கப்பட்டது. அதில் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் நடக்க வேண்டும், பேச வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

அதில் கூறப்பட்ட சில பரிந்துரைகள்: பொதுப் போக்குவரத்து வாகனங்களில் சரியாக அமர வேண்டும் சாப்பிடும் போது குறைவாக பேச வேண்டும் காலையில் அதிக மேக்-அப் போடக்கூடாது சொற்களை பார்த்து பயன்படுத்த வேண்டும் ‘ப்ரோ’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.

பல ஆலோசனைகள் பொதுவானதாக பார்க்கப்பட்டாலும் எப்படி ஐஸ்-கிரீம் சாப்பிட வேண்டும் என்று அவர்கள் கூறியது, சமூக ஊடகவாசிகளின் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்