அதிகளவு டீ குடிப்பதால் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படுகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.அதிகளவில் டீ குடித்தால் கபைன் நச்சுக்கள் உங்களை அடிமையாக்கிவிடும்.இதனால், கவனச்சிதறல், அமைதியின்மை, நிலையில்லா தன்மை மற்றும் உறக்கப் பழக்கத்தில் மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்.
மருந்துகள் வேலை செய்யாது
அதிகளவில் டீ குடிப்பதால், கீமோதெரபி மருந்துகள் உள்ளிட்ட மருந்துகள் உடலில் சென்று வேலை செய்வதைத் தடுக்கும். இதனால், அந்த மருந்தால் நோயைக் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
எது சரியான அளவு?
சராசரியாக ஒருநாளைக்கு மூன்று அல்லது ஐந்து கப் டீ குடிப்பது சரியான அளவாகும். இதற்கு அதிகமாக டீ குடிப்பது அவரவரின் உடல் நிலையை பொறுத்து மாறுபடும்.