இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன்….(29.01.2019)

29-01-2019 செவ்வாய்க்கிழமை விளம்பி வருடம் தை மாதம் 15-ம் நாள்.

தேய்பிறை. நவமி திதி இரவு 7.31 மணி வரை பிறகு தசமி. விசாக நட்சத்திரம் இரவு 7.49 மணி வரை பிறகு அனுஷம். யோகம்: மரணயோகம் இரவு 7.49 மணி வரை பிறகு சித்தயோகம்.

நல்ல நேரம் 8-9, 12-1, 7-8.
எமகண்டம் காலை மணி 9.00-10.30.
இராகு காலம் மாலை மணி 3.00-4.30.
குளிகை: 9:00 – 10:30.
சூலம்: வடக்கு.
பொது: சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
பரிகாரம்: பால்.மேஷம்:

பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும்.உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். பிற்பகல் 2 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

ரிஷபம்:

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.அரசால் அனுகூலம் உண்டு.வழக்கில் திருப்பம் ஏற்படும்.வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அமோகமான நாள்.

மிதுனம்:

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் நீண்ட நாளாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும்.வேற்று மதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சகஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

கடகம்:

பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்:

குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள்.சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார். தைரியம் கூடும் நாள்.

கன்னி:

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடிவரும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்:

பிற்பகல் 2 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும்.உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். மாலைப் பொழுதிலிருந்து நிம்மதி கிட்டும் நாள்.

விருச்சிகம்:

குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும்.உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். பிற்பகல் 2 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

தனுசு:

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வேற்று மதத்தவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

மகரம்:

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் அரவணைப்பு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

கும்பம்:

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும்.உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். இனிமையான நாள்.

மீனம்:

பிற்பகல் 2 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மாலையிலிருந்து எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும் நாள்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்