அவுஸ்திரேலிய மண்ணில் இலங்கை அணிக்கு நேர்ந்த பரிதாபம்….!! முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி….!!

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்துள்ளது.கடந்த 24 ஆம் திகதி இலங்கை மற்றும் அவுஸ்­தி­ரே­லிய அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரண்டு போட்­டிகள் கொண்ட முரளி – வோர்ன் கிண்ண டெஸ்ட் தொடரின் முத­லா­வது போட்டி பகலிரவு ஆட்டமாக பிரிஸ்பன் கப்பா மைதா­னத்தில் ஆரம்பமானது.இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து முதலாவது இன்னிங்ஸுக்காக 144 ஓட்டத்தை பெற்றது. இதையடுத்து பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி போட்டியின் முதலாம் நாள் முடிவின்போது 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 72 ஓட்டங்களை குவித்தது.

72 ஓட்டத்துடன் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து அவுஸ்திரேலிய அணி 106.2 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 323 ஓட்டங்களை பெற்றது.இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி இலங்கை அணியை விட 179 ஓட்டத்தினால் முன்னிலையிலிருந்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸுக்காக களமிறங்கிய இலங்கை அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் 17 ஓட்டங்களை பெற்றது.இந் நிலையில், போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பிக்க இலங்கை அணியின் வீரர்கள் ஒன்றன் பின் ஒருவராக ஆட்டமிழந்து 50.5 ஓவர்களை எதிர்கொண்டு, அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டனர்.இதனால், இலங்கை அணி 40 ஓட்டத்தால் அவுஸ்திரேலியாவிடம் இன்னிங்ஸ் தோல்வியை தழுவிக் கொண்டது.இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன 24 ஓட்டத்தையும், நிரோஷன் திக்கெல்ல 64 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுக்களையும், மிச்செல் ஸ்டாக் 2 விக்கெட்டுக்களையும், ஜேய் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுக்களையும், நெதன் லியோன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.இவ்விரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 05 ஆம் திகதி கென்பிரா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்