இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன்….(22.01.2019)

22-1-2019 செவ்வாய்கிழமை விளம்பி வருடம் தை மாதம் 8-ம் நாள்.

தேய்பிறை. பிரதமை திதி காலை 8.50 மணி வரை பிறகு துவிதியை.

ஆயில்ய நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு 2.19 மணி வரை பிறகு மகம். யோகம்: சித்தயோகம்.

நல்ல நேரம் 8-9, 12-1, 7-8.
எமகண்டம் காலை மணி 9.00-10.30.
இராகு காலம் மாலை மணி 3.00-4.30.
குளிகை: 12:00 – 3:30.
சூலம்: வடக்கு.

பொது: கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி, சென்னை சிங்கார வேலவர் இத்தலங்களில் தெப்போற்சவம்.
பரிகாரம்: பால்.மேஷம்:

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். நன்மை கிட்டும் நாள்.

ரிஷபம்:

குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள்.விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

மிதுனம்:

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகு, இளமைக் கூடும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். புதிய யோசனைகள் பிறக்கும்.வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கடகம்:

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும்.வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

சிம்மம்:

கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கன்னி:

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப் பீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும்.வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். இனிமையான நாள்.

துலாம்:

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந் தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். நெருங்கியவர் களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள்.பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்:

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில்அதிகாரிகளுடன் இணக்கமானசூழ்நிலை உருவாகும். நிம்மதியான நாள்.

தனுசு:

சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள்.

உங்களின் தனித்ததன்மையையே பின்பற்றுவது நல்லது. திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். போராட்டமான நாள்.

மகரம்:

கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புது நட்பு மலரும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்..

கும்பம்:

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மீனம்:

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்றுமுடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள்.அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்