பரீட்சைகளுக்கு தயாராகும் யாழ் மாவட்ட பரீட்சார்த்திகளுக்கு ஓர் அவசர அறிவித்தல்….!!

பொங்கல் தினத்தை முன்னிட்டு, சாரதி அனுமதி பத்திரத்துக்கான எழுத்து பரீட்சைகள், அன்றைய தினம் நடைபெற மாட்டாது என, யாழ்ப்பாணம் மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள பிரதி ஆணையாளர் பி.பரந்தாமன் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 15ஆம் திகதி தைப்பொங்கல் என்பதனால், அன்றைய திகதிக்கு திகதியிடப்பட்ட எழுத்து பரீட்சைகள் அன்றைய தினம் நடைபெறமாட்டாது.குறித்த பரீட்சையை திங்கள், வெள்ளி தவிர்ந்த ஏனைய வேலை நாள்களில், சாரதி அனுமதி பத்திர கிளையுடன் தொடர்பு கொண்டு பரீட்சை எழுத முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்