இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன்…. (07.01.2018)

07.01.2019 திங்கட்கிழமை விளம்பி வருடம் மார்கழி மாதம் 23-ம் நாள்.

துவிதியை திதி. பிரதமை திதி காலை 09.23 வரை. பிறகு உத்திராடம் நட்சத்திரம் இரவு 08.43 முதல். யோகம்: மரண-அமிர்த யோகம்.

நல்ல நேரம் 6.00 – 7.30, 3.00 – 4.00
எமகண்டம் மதியம் மணி 10.30-12.00.
இராகு காலம் மாலை மணி 7.30 – 9.00.
குளிகை: 1:30 – 3:00.

சூலம்: கிழக்கு.

பொது: மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் ரதோற்சவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

பரிகாரம்: தயிர்.மேஷம்:

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப் பீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.

ரிஷபம்:

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழையசிக்கலில் ஒன்று தீரும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.வியாபாரத்தில்பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும் புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மிதுனம்:

சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், சிறுசிறு அவமானங்களை நினைத்து தூக்கம் குறையும். பழைய பகை, கடன்களை நினைத்து கலங்குவீர்கள்.வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப் படும் நாள்.

கடகம்:

உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்தநல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள்வாங்குவீர்கள்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களைமதித்துப் பேசுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

சிம்மம்:

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும்.பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

கன்னி:

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

துலாம்:

முக்கிய பிரமுகர்களைசந்திப்பீர்கள். வர வேண்டியபணத்தை போராடி வசூலிப்பீர்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள்.வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.

விருச்சிகம்:

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள்.உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். மாறுபட்ட அணுகு முறையால் வெற்றி பெறும் நாள்.

தனுசு:

கணவன்-மனைவிக்குள் இருந்த கசப்புணர்வு நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகைகைக்கு வரும். தள்ளிப்போன விஷயங்கள் முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப்பேசுவார்கள்.வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மன நிறைவுகிட்டும் நாள்.

மகரம்:

ராசிக்குள் சந்திரன் தொடங்கியிருப்பதால் மனதில் இனம்புரியாத பயம்வந்துப் போகும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள்.வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

கும்பம்:

மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப் பான்மையும் வந்துச் செல்லும்.உடல் நலத்தில் கவனம் தேவை. திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மீனம்:

உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்