வீட்டில் உள்ள கெட்ட சக்தியை காட்டிக்கொடுக்கும் 1 டம்ளர் தண்ணீர்!

28

வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால், அதனால் வீட்டினுள் எந்நேரமும் சண்டை சச்சரவுகள் ஏற்படும்.

அதுமட்டுமின்றி, வீட்டில் உள்ளோர்கள் ஏதோ பேய் அடித்தது போன்று மிகுந்த களைப்புடனும், ஒய்வின்றி இருப்பது போன்றும் உணர்வார்கள். மொத்தத்தில் சந்தோஷமே இருக்காது.

இதனால் வீட்டில் உள்ள கெட்ட சக்தியை அறிய இதோ வழி

தேவையான பொருட்கள்

கண்ணாடி டம்ளர்

கல் உப்பு

செய்யும் முறை

கண்ணாடி டம்ளரில் மூன்றில் ஒரு பங்கு கல் உப்பு போட்டு, தண்ணீரை முழுமையாக நிரப்பி, எந்த அறையில் எதிர்மறை ஆற்றல் உள்ளது என்ற சந்தேகம் உள்ளதோ, அங்கு மறைமுகமான இடத்தில் வைத்துவிட்டு, 24 மணிநேரம் கழித்து காண வேண்டும்.

முக்கியமாக டம்ளர் வைத்த இடத்தை நகர்த்தக்கூடாது. 24 மணிநேரம் கழித்து அந்த டம்ளரைப் பார்க்கும் போது, அது வைத்த இடத்திலேயே எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்தால், அந்த அறையில் கெட்ட சக்தி இல்லை என்று அர்த்தம்.

ஒருவேளை ஏதேனும் மாற்றம் தெரிந்தால், ஏதோ ஒரு சக்தி அந்த அறையில் உள்ளது என்று அர்த்தம். இந்த முறையை வீட்டில் உள்ள வேறொரு அறையிலும் முயற்சிக்கலாம்.

Comments

comments