வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிக்கப் போகும் அதிஷ்டம்…!! இடர் முகாமைத்துவ அமைச்சின் அறிவித்தல்…!!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபா வழங்கப்படும் என பொது நிர்வாக மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான கூட்டத்தில், அமைச்சின் மேதில செயலாளர் அமலநாதன் இதனை தெரிவித்துள்ளார்.இலங்கைப் பிரஜைகள் அனைவரும் அனர்த்தத்தை எதிர்கொள்ளலாம் என்ற அடிப்படையில் அவர்களுக்கு காப்புறுதி செய்யப்பட்டுள்ளது.அந்த வகையில் வெள்ள அனர்த்தம் காரணமாக வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்களுக்கு முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபா வழங்கப்படும்.பின்னர் வீட்டின் சேதம் மதிப்பீடு செய்யப்பட்டு 2.5 மில்லியன் வரை இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த புதுகுடியிருப்பு பிரதேச செயலாளர் பிரதீபன்,கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வீடுகள் தற்காலிக வீடுகளே.

எனவே பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒரு தீர்மானித்த தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும். அதுவே பொருத்தமானது என குறிப்பிட்டுள்ளார்.இதனை கொள்கை ரீதியாக தீர்மானிக்க வேண்டும். அத்துடன் அதனை நாடாளுமன்றத்தில் தான் மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்