மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் புதிய முயற்சி பெருவெற்றி!

மனதளவில் தாம் நினைத்ததை யதார்த்தத்தில் செயல்படுத்த இயலாது தவிக்கும் மனக்கோளாறுகளில் ஒன்றான மனச்சிதைவு நோயினால் உலகளாவிய ரீதியாக சுமார் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயை முற்றிலுமாக குணப்படுத்துவதற்கு இதுவரையில் எந்தவொரு மருந்து வகையும் கண்டுபிடிக்கப்படவில்லை.இந்தநிலையில், ரஷ்யாவில் உள்ள ஃபாவ்லோன் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பெல்ட்மேன் ஆய்வு கூடத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த முயற்சியில் தற்போது வெற்றி கண்டுள்ளனர்.

TAAR1 என தற்போது குறியீட்டு பெயர் மட்டும் சூட்டப்பட்டுள்ள புதிய மருந்தை ஆய்வு கூடத்தில் உள்ள எலிகளின் நரம்பு மண்டலத்தில் ஊசி மூலம் செலுத்தி பரிசோதித்துள்ளனர்.ஆராய்ச்சியின் எதிர்வினையாக எலிகளின் மூளைப்பகுதியில் உள்ள நரம்பியல் பகுதியில் சில மாற்றங்கள் நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த மருந்தை மாத்திரை வடிவில் தயாரித்து வெளியிடுவதன் மூலம் மனச்சிதைவு, வெறிநோய் உள்ளிட்டவற்றை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக இந்த ஆராய்ச்சி குழுவை சேர்ந்த நிபணர் ஏலியா சுக்னோவ் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்