உங்கள் விரல் நகத்தில் பிறை போன்று உள்ளதா? அப்ப இந்த கோளாறு தான்

நம் விரல் நகத்தில் பிறை போன்று வெள்ளை நிறத்தில் இருப்பதை கவனித்துள்ளீர்களா?

அதை வைத்தும், நகங்களின் அமைப்பை வைத்தும் நம் உடல் எந்தளவு ஆரோக்கியமாக இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்! அது எப்படி என பார்ப்போம்

ஒருவருக்கு நல்ல பளிச்சென்று வெள்ளையாக பிறை போன்று பாதி நகத்தில் இருந்தால் அவர்களுக்கு செரிமானம் மற்றும் தைராய்ட் சுரப்பிகள் பிரச்சனையில்லாமல் இருக்கும்.

நகத்தில் அந்த பிறை போன்றது சிறிய அளவில் இருந்தால் அவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது மற்றும் செரிமான கோளாறு அவர்களுக்கு இருக்கிறது என அர்த்தமாகும்.

 

விரல் நகத்தில் அந்த பிறை போன்றது நீல நிறத்தில் இருந்தால் அவர்களுக்கு நுரையீரல் மற்றும் இரத்த ஓட்டத்தில் ஏதாவது சங்கடங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

சிலரின் நகங்கள் வளைந்து காணப்படும். அப்படி இருப்பவர்களுக்கு வைட்டமின் பி-12 மற்றும் இரும்பு சத்து குறைபாடு உள்ளதாக அர்த்தமாகும்.

 

நகமானது மஞ்சள் நிறத்தில் இருந்தால் அவர்களுக்கு பூஞ்சை தொற்று (Fungal Infection) இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

 

நகங்கள் நல்ல வெள்ளை நிறத்தில் இருந்தால் அவர்களுக்கு கல்லீரல் சம்மந்தமான மஞ்சள் காமாலை, ஈரல் போன்றவற்றில் பிரச்சனை இருக்கலாம்.

 

நகத்தின் நடுவே கருப்பாக கோடுகள் போல இருந்தால் தோல் புற்றுநோய் உண்டாவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அர்த்தம்.

நகங்களில் நடுவே விரிசல் இருந்தால் அவர்களுக்கு தோல் சம்மந்தமான வியாதிகள் இருக்கலாம்.

 

 

Related Post

அடிக்கடி விக்கல் ஏற்படுகிறதா? அப்போ இதுதான் உங்கள் பிரச்சனை

அடிக்கடி விக்கல் ஏற்படுகிறதா? அப்போ இதுதான் உங்கள் பிரச்சனை

நமக்கு அடிக்கடி விக்கல் ஏற்பட்டால், யாரோ நம்மை அதிகமாக நினைக்கிறார்கள் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் நமக்கு எதனால் அடிக்கடி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *