இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன்…(27. 11.2018 )

27-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 11ம் திகதி, ரபியுல் அவ்வல் 18ம் திகதி, 27-11-2018 செவ்வாய்க்கிழமை தேய்பிறை பஞ்சமி திதி இரவு 2:49 வரை அதன்பின் சஷ்டி திதி, புனர்பூசம் நட்சத்திரம் மதியம் 1:37 வரை; அதன்பின் பூசம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00-4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00-10:30 மணி
* குளிகை : மதியம் 12:00-1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : மூலம், பூராடம்
பொது : முருகன், துர்க்கை வழிபாடு.மேஷம் :
தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை நல்வழியில் நடத்தும். தொழில் வியாபார நடைமுறை சீராக கூடுதல் கவனம் தேவை.பணச்செலவில் சிக்கனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம்.

ரிஷபம் :
தகுதி திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயல்களில் எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும்.தொழில் வியாபாரம் நண்பரின் உதவியால் முன்னேற்றம் பெறும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

மிதுனம் :
சிலர் இடையூறு செய்ய முயற்சிப்பர். செயல்களில் அதிக தற்காப்பு வேண்டும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும்.பணவரவை சிக்கனமாக பயன்படுத்துவீர்கள். தியானம், தெய்வ வழிபாடு மனஅமைதியை ஏற்படுத்தும்.

கடகம் :
லட்சிய மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி திருப்திகரமாகும். உபரி வருமானம் கிடைக்கும்.குடும்ப உறுப்பினர் விரும்பிக்கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

சிம்மம் :
புதிய முயற்சிகளை நிறைவேற்ற உரிய நுணுக்கங்களை அறிந்து கொள்வது நல்லது. பிறரிடம் வீண்பேச்சு வேண்டாம்.தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். நேரத்திற்கு உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும்.

கன்னி :
மனதில் வெகுநாள் இருந்த சஞ்சலம் தீரும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி நிலை உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும்.பிள்ளைகளின் நற்செயல் பெருமையை தேடித்தரும். மாணவர்கள் தனித்திறமையால் புகழ் பெறுவர்.

துலாம் :
நண்பர்கள் தேவையான உதவியை வழங்குவார். தொழில், வியாபாரம் செழித்து வளர கூடுதல் மூலதனம் செய்வீர்கள்.நிலுவைப் பணம் வசூலாகும். பணியாளர்கள் சலுகை பெறுவர். குடும்பத்தில் சுப நிகழ்வு உருவாகும்.

விருச்சிகம் :
பணித்திறமையை வளர்த்துக் கொள்வதால் சில நன்மை பெறலாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும்.பணியாளர்கள் பணிச்சுமை கூடும். குறைந்த அளவில் பணம் கிடைக்கும். உறவினர் வருகை வீட்டில் மகிழ்ச்சியை தரும்.

தனுசு :
மனம் புகழ்ச்சியை விரும்பும். நண்பரின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை இருக்கும்.கொஞ்சம் கடன் பெறுவீர்கள். அதிக பயன்தராத பொருள் வாங்குவதை தவிர்க்கவும்.

மகரம் :
மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உறவினர்க்கு உதவுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இடையூறு விலகும்.சேமிக்கும் அளவில் வருமானம் கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கும்பம் :
சுய திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். பொது விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் வளரும். இஷ்ட தெய்வ அருளால் தொழிலில் உற்பத்தி வியாபாரம் செழிக்கும்.பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. கூடுதல் சொத்து வாங்க திட்டமிடுவீர்கள்.

மீனம் :
எதிர்மறையான சூழல்களில் கவனம் தவிர்க்கவும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீரான முன்னேற்றம் பெறும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும்.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்