தினமும் இத பத்து நிமிஷம் செஞ்சு வந்தா தாராளமா நூறு வயசு வாழலாம்!

வாழ்க்கையில் எல்லாமும் எல்லாருக்கும் கிடைக்காது என்பார்கள். ஆனால், நல்ல ஆரோக்கியம், நல்ல உணவு, நல்ல உறவுகள் எல்லாருக்கும் கிடைக்கும். அதற்கு ஏற்ற வகையில் நாம் நடந்துக் கொண்டால், உழைத்தால். நல்ல உணவும், நல்ல உறவுகளும் தான் ஒரு நல்ல ஆரோக்கியத்தின் ஆணிவேர். அந்த வகையில் இந்த விஷயங்களை நீங்கள் சரியாக பின்பற்றி வந்தால் தாராளமாக நூறு வயது ஆரோக்கியமாக வாழலாம்…

எந்த ஒரு விஷயத்தையும் மிகவும் சீரியசாக எடுத்து மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம். அமைதியாக அமர்ந்து யோசித்தால் கடினமான விஷயங்களுக்கு கூட எளிய தீர்வு கிடைக்கும்.

தினமும் கொஞ்ச நேரமாவது வயதானவர்கள், சிரியவர்களுடன் செலவழித்து வாருங்கள். இது நல்ல விஷயங்கள் கற்றுக் கொள்ளவும், கற்றுக் கொடுக்கவும் பயனளிக்கும்.

வேலை, வேலை என வேலையை கட்டிக்கொண்டு அழவேண்டாம். உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் உறவும், நட்பும் தான் வருமே தவிர வேலை அல்ல

தினமும் 10 – 30 நிமிடங்கள் ஜாக்கிங் அல்லது, ஒரு மணிநேரம் வாக்கிங் செல்லுங்கள்.

உங்கள் கடந்த காலம் நிகழ் காலத்தையும், நிகழ் காலம் கடந்த காலத்தையும் பாதிக்கும் படி எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம்.

மற்றவர்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றி எண்ணி கவலைப்பட வேண்டாம்.

தினமும் பத்து நிமிடமாவது அமைதியான இடத்தில் உட்கார்ந்திருங்கள். நல்ல உடல் நலனுக்கு இது உதவும்.
மற்றவரை பற்றி கிசுகிசு, புரளி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

கற்பனையை வளர்த்துக் கொள்ளுங்கள். நிறைய கனவு காணுங்கள்.

மற்றவருடன் தொழில் சார்ந்து, இல்லறம் சார்ந்து உங்களை ஒப்பிட்டுக் கொள்ள வேண்டாம். ஒவ்வொருவருடைய பாதையும் வெவ்வேறானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இறைச்சியை காட்டிலும் அதிகம் காய்கறி, பழங்கள் உட்கொள்ளுங்கள். நீங்கள் வேலை செய்வதற்கு ஏற்ற வகையில் உணவுகள் உட்கொள்வது சிறந்தது.

தினமும் சிறிது நேரம் சிரித்து பேசுங்கள், மூன்று பேரையாவது சிரிக்க வையுங்கள்!

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்