பேருந்தில் இருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் பரிதாபமாக பலி!

14

தனியார் பேருந்து ஒன்றில் இருந்து நபர் ஒரவர் வீழ்ந்து பரிதாபமாக பலியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (07) மாலை இடம்பெற்றுள்ளதாகவும், புஜாப்பிடி பிரதேசத்தினை சேர்ந்த நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments