கல்லீரல் வீக்கம் குறையணுமா? இதோ அற்புதமான மூன்று வீட்டு வைத்தியங்கள்…

நம்மடைய சருமத்துக்கு அடுத்ததாக, உடலின் மிகப்பெரிய உறுப்பு கல்லீரல். வயிற்றின் மேற்புறத்தில், வலது பக்கத்தில், இலை போல் விரிந்திருக்கும் உதரவிதானத்துக்குக் கீழே, கால் இல்லாத காளான் வடிவில் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கிறது கல்லீரல்.

ஆங்கிலத்தில் லிவர் என்று அழைக்கப்படும். கிட்டதட்ட ஒன்றரை கிலோ எடையுள்ள கல்லீரல், மார்புக் கூட்டுக்குப் பின்புறம் பத்திரமாக இருக்கிறது. இதயத்தைப் போலவே கல்லீரலிலும் எலும்புகள் கிடையாது.

கல்லீரல் கல்லீரலைக் கைகளால் தொட்டுப் பார்த்தால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும். மேலோட்டமாகப் பார்க்கின்ற பொழுது ஒரே உறுப்பாக இருந்தாலும் மேலோட்டமாகப் பார்த்தால், ஒரே உறுப்பாகத் தெரிந்தாலும், உடல் அமைப்பு ரீதியாக வலப்பக்கம் ஒன்றும் இடப்பக்கம் ஒன்றுமாக இரண்டு பகுதிகளைக் கொண்டதாக இருக்கிறது. இதிலிருந்து தான் 4 அங்குல பித்த நாளம் தொடங்குகிறது.

பித்தப்பை இது கீழ்நோக்கிய படி இறந்து, சிறியதாக வெள்ளிக்காயைப் போன்று சிறிய பித்தப்பையோடும் (Gall bladder), முன்பகுதியில் அடைப்புக்குறி போன்றதொரு சிறு குடலோடும் (Duodenum) கல்லீரலை வந்து பித்தப்பை இணைக்கிறது. நம்முடைய கல்லீரலைக் குறுக்கு நெடுக்காகப் பிளந்து பார்த்தால், அதற்குள் மிகப்பெரிய ஆச்சர்யம் இருக்கிறது. அதற்குள் ஆயிரக்கணக்கான பல்லாங்குழிகள் போன்று குட்டி குட்டி ‘ஹெப்பாடிக் செல்கள் இருக்கும். கல்லீரலில் இருந்து உற்பத்தி ஆகின்ற பித்தநீர், பித்த நாளம் வழியாகப் பித்தப்பைக்கு வந்து கொஞ்ச காலம் இருந்துவிட்டு, உணவுச் செரிமானத்துக்கு துணை புரிவதற்காக முன்சிறுகுடலுக்குப் போய் சேர்கிறது. உடலினுடைய தேவைக்கு ஏற்றபடி, பித்த நீர் சுரக்கும். ஒரு நாளைக்குக் குறைந்தது அரை லிட்டர் (500 மில்லி) வரை பித்தநீரைச் சுரந்து கொண்டு இருக்கிறது. இந்த கல்லீரலை ஒரு கெமிக்கல் புக்டரி என்றே சொல்லலாம். உடலில் நடக்கும் அத்தனை கெமிக்கல் ரியாக்ஷன்களும் அங்கிருந்தான் நடந்து கொண்டிருந்தது. கிட்டதட்ட உலகில் உள்ள அத்தனை விஞ்ஞானிகளும் சேர்ந்து உருவாக்கினால் கூட இவ்வளவு ஆற்றல் வாய்ந்த நம்முடைய பித்தநீர் போன்று உருவாக்கவே முடியாது.

உடல் வெப்பம் நம்முடைய உடலுக்குத் தேவையான ஒட்டுமொத்த வெப்பமும் இந்த கல்லீரலில் இருந்து தான் உற்பத்தி ஆகிறது. அதேபோல், ரத்தம் உறைவதற்குத் தேவையான பொருள்களையும் ரத்த நாளங்களுக்குள் ரத்தம் உறையாமல் இருக்க வேண்டிய பொருள்களையும் இந்த கல்லீரல் தான் உற்பத்தி செய்கிறது.

ஊட்டச்சத்துக்கள் நாம் சாப்பிடுகின்ற ஊட்டச்சத்துக்களான, இரும்புச் சத்து, வைட்டமின்கள், வைட்டமின் பி12, வைட்டமின்கள் ஏ ஆகியவற்றைச் சேமித்து வைத்துக் கொள்வது கல்லீரல் தான். உடலுக்குள் உண்டாகின்ற நோய்த் தொற்றுதலை எதிர்த்து, போர் புரிகின்ற ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. நம்முடைய உடலுக்குத் தேவையாக ஊக்கமும் செயல்திறனும் கல்லீரல் தான் கொடுக்கிறது. நம்மால் ஒரு நாளைக்கு அதிகபட்சம் பத்து வேலைகள் செய்ய முடியுமா? ஆனால் நம்முடைய கல்லீரல் கிட்டதட்ட ஐந்நூறு வேலைகளுக்கு மேல் செய்கின்ற ஆற்றல் கொண்டது. இத்தனை வேலைகளுக்கும் கல்லீரலில் நடக்கின்ற ரசாயன மாற்றங்களைச் செய்கிறது. நாம் சாப்பிடுகின்ற உணவில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்களைக் கிரகித்து உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்றுவது கல்லீரல். இது எப்படி சாத்தியம் என்று பார்ப்போம்.

ரத்தத்தில் கொழுப்பு நாம் சாப்பிடுகின்ற உணவு இரைப்பையை விட்டு கீழ் இறங்கியதும் பித்தநீர் பித்தப்பையில் இருந்து வெளியேறி, முன் சிறுகுடலுக்கு வந்து விடுகிறது. உணவில் இருக்கின்ற கொழுப்பை பிரிக்கும் செயலை கல்லீரல் செய்கிறது. அங்கு வந்து சேரும் கணைய நீரிலிருந்து லைப்பேஸ் என்சைம் வெளியேறுகிறது. நம்முடைய உணவில் உள்ள கொழுப்புச்சத்தை உறிஞ்சி எடுத்து ரத்தத்துக்குக் கொடுக்கிறது.

அரிசி உணவு நாம் சாப்பிடுகின்ற அரிசி உணவில் உள்ள கார்போ ஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றி, ரத்தத்தில் கலக்கச் செய்வது கல்லீரல் தான். அதேசமயம் அரிசி உணவில் உள்ள கார்போ1ட்ரேட் முழுவதுமாக குளுக்கோஸாக மாறி, ரத்தத்தில் கலந்து விட்டாலும் பேராபத்து தான். அதனால் தேவையான அளவுக்கு ரத்தத்துக்குன் குளுக்கோஸைக் கொடுத்துவிட்டு மீதியை கிளைக்கோஜனாக மாற்றி தன்னிடம் சேமித்து வைத்துக் கொள்கிறது.

புகை, தூசி நம்முடைய உடலுக்குள் சென்று சேருகின்ற புகை மற்றும் தூசி ஆகியவற்றைக் கல்லீரல் தான் சுத்தம் செய்கிறது. ரத்த அணுக்களின் ஆயுட்காலம் முடிகின்ற பொழுது, இவை மண்ணீரலுக்கு வரும். அப்போது பிலிரூபின் என்னும் நச்சுப்பொருள் வெளிவருகின்றது. இது ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருந்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும். நம்முடைய உடலுக்குள் உற்பத்தியாகிற யூரியாவை கல்லீரல் தான் கட்டுக்குள் வைக்கிறது.

ரத்தம் உறைதல் நம்முடைய உடலில் எங்கேயாவது வெட்டுக்காயம் ஏற்பட்டால், ஓரிரு நிமிடங்களில் ரத்தம் வருவது நின்றுவிடும். இதற்குக் காரணம் என்னவென்றால், நம்முடைய கல்லீரல் உற்பத்தி செய்கின்ற புரோத்ராம்பின் என்ற ரசாயனம் தான். இந்த அற்புத வேலையைச் செய்வது கல்லீரல் தான்.

இதயத் துடிப்பு நம்முடைய இதயம் துடிப்பதற்குத் தேவையானது ஒருவகையான சக்தி. மூளை வளர்ச்சிக்குத் தேவையான சக்தி ஒன்று. முடி வளர்வதற்குத் தேவையான சக்தி ஒன்று. இவையெல்லாவற்றுக்கும் வெவ்வேறு அளவில் சத்துக்கள் தேவைப்படும். அப்படி எந்தெந்த விஷயத்துக்கு எவ்வளவு சத்துக்கள் தேவைப்படுமோ அதற்கு ஏற்றபடி, அந்த உறுப்புக்கு சரியான அளவில் பிரித்துக் கொடுப்பது கல்லீரல் தான்

கல்லீரலை பாதுகாக்கும் உணவுகள் எலுமிச்சை – தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடித்தால் அது கல்லீரலைத் தூண்டுகிறது. பீட்ரூட் – உடலில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்ற உதவுகின்றது. இந்த உணவுப் பொருள்கள் பொதுவான ஆரோக்கியத்திற்கும் உதவும். இவை கல்லீரல் நோய்களைக் குணமாக்குகின்ற கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரைப் பெருக்கும். மாதுளங்கனி – மாதுளம் பழம் நம்முடைய கல்லீரலை வலுவூட்டி சீராகச் செயல்பட வைக்கிறது. துளசி – புகைப்பழக்கம், மது, இரவு கண் விழித்தல், அதிக அளவு காரமான உணவுகள், அதிக காபி பழக்கம் உள்ளவர்களுக்கு கல்லிரல் அழற்சி, கல்லீரல் சிதைவு ஆகியவற்றை துளசி தடுக்கிறது.

கல்லீரல் நோய் மனிதனுடைய உடல் அமைப்புகளில் பல அற்புதங்களைச் செய்வது கல்லீரல் தான். அதேபோல், சுரப்பிகளிலே மிகவும் நுணுக்கமானது மற்றும் அளவிலும் பெரியது கல்லீரல் தான். இந்த கல்லீரலானது இதயம், சிறுநீரகம், ரத்தத்தில் சிகப்பணுக்கள் உணவுகளைச் செரிக்கச் செய்வது போன்ற எண்ணற்ற வேலைகளை இடையறாது செய்து கொண்டே இருக்கிறது. ஈரல் வீக்கம், ஈரல் சுருங்கிப் போதல், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் தான் கல்லீரல் நோய்கள் தாக்கும்.

அறிகுறிகள் வாயில் கசப்புச் சுவை இருப்பது போல் இருக்கும். வாயில் ருசியின்மை போன்ற உணர்வு இருக்கும். வாயில் அதிகப்படியான நீர் உற்பத்தியாதல், பசியின்மை, உண்ட உணவு சரியாக செரிமானமின்மை, காலையில் எழுந்ததும் பித்தவாந்தி வருதல், முகப்பொலிவு குறைதல், முகம் வற்றிப்போய் எலும்புகள் தெரிதல், வயிறு மட்டும் பெருத்துப் போய், கை கால் மெலிந்து போகும். அடிக்கடி காய்ச்சல் வருதல் போன்ற பிரச்னைகள் உண்டாகும்.

கல்லீரல் நோய் தீர்க்கும் இயற்கை மூலிகை மருந்துகள் திரிபலா கஷாயம் தேவையான பொருள்கள் கடுக்காய் தோல் – 100 கிராம் நெல்லி வற்றல் – 100 கிராம் தான்றிக்காய் தோல் – 100 கிராம் செய்முறை மேற்கண்ட பொருள்கள் எல்லாவற்றையும் சுத்தப்படுத்தி, வெயிலில் காய வைத்து, இடித்து பொடி செய்து மெல்லிய சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த பொடியில், இரண்டு ஸ்பூன் பொடி எடுத்து, 200 மில்லி தண்ணீரில் கலந்து, அதை அப்படியே அசையாமல் இரவு முழுக்க வைத்திருந்துவிட்டு, காலையில் அதை வடிகட்டி, அதில் கொஞ்சம் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அதேபோல் மாலையிலும் குடிக்கலாம். இந்த மருந்தின் மூலம் காமாலை, ஈரல் நோய்கள் போன்றவை குணமாகும்.

அன்னாசிப்பழம் அன்னாசிப் பழத்தில் இருந்து சாறு பிழிந்து எடுத்து, ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று தடவை 100 மில்லி அளவுக்கு குடித்து வந்தால், ஈரல் நோயினுடைய வீரியம் குறையும்.

முள்ளங்கிச் சாறு முள்ளங்கியை அரைத்து சாறெடுத்துப் பிழிந்து, அந்த சாறினை 25 மில்லி அளவுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை குடிப்பதால் வலப்பாட்டு, இடப்பாட்டு ஈரல் வீக்கங்கள் குறையும். ஈரலில் இருக்கும் கட்டிகளும் கரைந்துவிடும்

Read more at: https://tamil.boldsky.com/health/wellness/2018/wonderful-home-remedies-for-liver-disesses/articlecontent-pf157645-022553.html

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்