வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லைக் கந்தனின் பூங்காவன உற்சவம்…..!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லைக் கந்தனின் பூங்காவன உற்சவம்  லட்சக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. வரலாற்றுப் புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் எம்பெருமான் முருகப்பெருமானின் திருக்கல்யாணம் இடம்பெற்றிருந்தது.25 நாட்களாக கோலாகலமாக இடம்பெற்ற மகோற்சவத்தின் நிறைவை தொடர்ந்து நேற்று (திங்கட்கிழமை) மாலை பூங்காவன உற்சவம் இடம்பெற்றிருந்த நிலையில் அதன்போது முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து முருகப் பெருமான் வள்ளி, தெய்வானை சமேதரராய் வெளிவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு, தொடர்ந்து 25 நாட்கள் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று தீர்த்தத் திருவிழாவுடன் மகோற்சவம் இனிதே நிறைவுபெற்றிருந்தது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்