காணி அபகரிப்பிற்கு எதிராக முல்லையில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி…..! அலைகடலெனத் திரண்ட மக்கள் கூட்டம்..!!

மகாவலி எல் வல­யம் ஊடாக முல்­லைத்­தீவு மக்­க­ளின் காணி­கள் அப­க­ரிக்­கப்­ப­டு­வ­தை தடுத்து நிறுத்­தக் கோரி முல்­லைத்­தீ­வில் சற்றுமுன்னர் மாபெரும் பேரணி ஆரம்பமானது.முல்­லைத்­தீவு பி.டபிள்யூ சந்­தி­யில் ஆரம்­பிக்கப்பட்டுள்ள குறித்த பேரணி முல்­லைத்­தீவு மாவட்ட செய­ல­கத்­தை நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது.இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்துமாறு கோரி பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.இதேவேளை இன்று போராட்டம் நடைபெறும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்