யாழில் இடம்பெற்ற வாள்வெட்டில் 8 பேர்படுகாயம்

2249

சுழிபுரம் பகுதியில் இரு குடும்பங்களுக்கிடையில் நிலவிய நீண்ட நாள் பகை நேற்றுமுன்தினம் வாள்வெட்டு மற்றும் அடிதடியில் முடிந்ததால் இரு குடும்பங்களையும் சேர்ந்த 8பேர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் கொலைச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைதாகி கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் பிணையில் விடுதலையாகி வந்துள்ளார்.

இந்நிலையில் பிணையில் வந்த சந்தேக நபரின் குடும்பத்துக்கும் கொலையானவரின் குடும்பத்துக்குமிடையில் கடந்த திங்கட்கிழமை முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

முரண்பாடு தொடர்பில் கொலையானவரின் குடும்பத்தினர் செவ்வாய்க்கிழமைவட்டுக்கோட்டைப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

முறைப்பாட்டுக்கமைய நேற்று முன்தினம் புதன்கிழமை சம்பந்தப்பட்ட தரப்பினர்கள்பொலிஸ்நிலையம் வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் பொலிஸ் நிலையம் செல்வதற்காக வந்த கொலையானவரின் குடும்பத்தைச்சேர்ந்த சகோதரர்கள் இருவரை வழிமறித்த சந்தேகநபர் உட்பட்ட 4பேர் கொண்ட கும்பல் செல்லையா வினோதரன் (வயது 19) என்பவரை வாளின்பிடியால் கடுமையாகத் தாக்கியதில் அவர் மயங்கி வீழ்ந்துள்ளார்.

இதன்போது சுதாதரித்துக்கொண்ட தமையன் தனது தம்பியாரைக்காப்பாற்றுவதற்காக வாள் கும்பலுடன் போராடியுள்ளார்.

இதன் போதுஅவர்களிடம் வாளைப் பறித்த தமையன் 4 பேரையும் வெட்டியதாகபொலிஸ் முறைப்பாட்டில் பதிவு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து காயமடைந்த சந்தேக நபருடன் சம்பந்தப்பட்ட தரப்பினர்குறித்த வாளால் வெட்டியவரின் வீட்டிற்குச் சென்றுதாக்குதல் நடத்தியதில் இரு தரப்பிலும் மூவர்கல் தாக்குதலுக்குள்ளாகினர்.

படுகாயமடைந்தவர்கள் சங்கானை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்மேலதிக சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் யாழ்.போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்துபொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் நேற்றும் பதட்டமான நிலைகாணப்பட்டதாக தெரியவருகிறது.

Comments

comments