மந்திரவாதியின் பிடியில் சிக்கி 15 வருடமாக குகைக்குள் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட பெண்!!

குகை ஒன்றில் 15 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் மந்திரவாதியின் பிடியில் சிக்கி பாலியல் தொல்லைக்கு உள்ளானது தற்போது அம்பலமாகியுள்ளது.இந்தோனேசியாவில் வசிக்கும் தம்பதியினர் ஒருவர் 15 ஆண்டுகளுக்கு முன் தமது மகளை பேய் விரட்டும் மந்திரவாதியிடம் சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர். ஆனால், அதன் பிறகு அவர்களது மகளை காணவில்லை.இதுகுறித்து மந்திரவாதியிடம் கேட்ட போது,இந்நிலையில் சமீபத்தில், மந்திரவாதியின் வீட்டிற்கு அருகே இருந்த குகை ஒன்றில் இருந்து 28 வயது இளம்பெண் ஒருவர் மீட்கப்பட்டார். அப்போதுதான் குறித்த பெண்தான் அந்த தம்பதியினரின் மகள் என்று தெரியவந்துள்ளது.

கடந்த 15 வருடங்களாக அந்த இளம்பெண்ணை ஏமாற்றி, குகைக்குள் மறைத்து வைத்துள்ளார்.பகலில் குகையிலும், இரவில் மந்திரவாதியின் வீட்டிற்கு அருகே உள்ள குடிசையில் அந்த பெண் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.குகைக்குள் தங்கி இருந்த 15 வருடங்கள் அந்த பெண்ணை மந்திரவாதி பலாத்காரம் செய்துள்ளார். மேலும், கர்ப்பம் ஆகாமல் தடுக்க பலமுறை மருந்து கொடுத்தும் உள்ளார்.இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

இந்த வழக்கில் மந்திரவாதி குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் 15 வருட சிறை தண்டனை கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உங்களது மகள் வேலை தேடி ஜகார்த்தா நகருக்கு சென்று விட்டாள் என கூறியுள்ளார். மந்திரவாதியின் பேச்சை கேட்டு அந்த தம்பதியினர் மகளை தேடவில்லை.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்