அதிவேகத்தினால் வந்த விபரீதம்…மின் கம்பங்களுடன் மோதி கங்கைக்குள் வீழ்ந்த பேரூந்து!! இருவர் ஸ்தலத்தில் பலி!! பலர் படுகாயம்…!

கொழும்பிலிருந்து சென்ற தனியார் பேருந்தொன்று கங்கையொன்றுக்குள் விழுந்ததால் ஏற்பட்ட கோர விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், நான்கு பேர் படுகாயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.

குறித்த விபத்து இன்று காலை ஹம்பலாந்தோட்டை – நோனாகம பிரதேசத்தில் வைத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.விபத்தில் கதிர்காமத்தை சேர்ந்த 32 வயது நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை கதிர்காமம் நோக்கி சென்ற இந்த பேருந்து பல மின் கம்பங்களுடன் மோதி இறுதியில் நொதகம கங்கையில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் தப்பியோடியுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைகளை ஹூங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்