வீட்டிற்குள் புகுந்து பெண்களை கட்டி வைத்து நகைகள் கொள்ளை…. யாழில் பயங்கரம்…!!

யாழ்ப்பாணத்தில் மூன்று பெண்களைக் கட்டிவைத்து அவர்களிடம் இருந்த ஆறு பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் கோப்பாய் வீதியிலுள்ள உள்ள வீடொன்றில், நேற்று அதிகாலை கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வீட்டுக்குள் இறங்கிய திருடர்கள் பெண்களைத் தாக்கி அவர்களைக் கட்டி வைத்ததுடன், அவர்கள் அணிந்திருந்த நகைகள், வீட்டிலிருந்த நகைகள் என்பவற்றைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதல் காரணமாக பாதிப்படைந்த மூன்று பெண்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்