உலகக் கிண்ணத்தில் குரோஷியாவிடம் தோற்ற இங்கிலாந்து….கதறியழுத அகதிக் குடும்பம்…..!!

இங்கிலாந்தில் வசிக்கும் சிரியாவை சேர்ந்த குடும்பத்தார் கால்பந்து அரையிறுதியில் இங்கிலாந்து தோற்ற நிலையில் கதறி அழுதுள்ளனர்.ரஷ்யாவில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக்கிண்ண தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து- குரேஷியா அணிகள் மோதிய நிலையில் இங்கிலாந்து அணி தோற்றது.இதன் மூலம் குரேஷியா அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.இங்கிலாந்து தோல்வியடைந்தது அந்நாட்டு ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் அங்கு குடியேறிய சிரிய குடும்பத்தை இது பெரிதும் பாதித்துள்ளது.

சிரியாவிலிருந்து கடந்த 2015-ல் இங்கிலாந்துக்கு அகமத் ரசித் தனது இரண்டு குழந்தைகளுடன் குடியேறினார்.இங்கிலாந்தில் வசிக்கும் சிரியாவை சேர்ந்த குடும்பத்தார் கால்பந்து அரையிறுதியில் இங்கிலாந்து தோற்ற நிலையில் கதறி அழுதுள்ளனர்.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக்கிண்ண தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து- குரேஷியா அணிகள் மோதிய நிலையில் இங்கிலாந்து அணி தோற்றது.இதன் மூலம் குரேஷியா அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.இங்கிலாந்து தோல்வியடைந்தது அந்நாட்டு ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் அங்கு குடியேறிய சிரிய குடும்பத்தை இது பெரிதும் பாதித்துள்ளது.சிரியாவிலிருந்து கடந்த 2015-ல் இங்கிலாந்துக்கு அகமத் ரசித் தனது இரண்டு குழந்தைகளுடன் குடியேறினார்.

சிறு வயதிலிருந்தே கால்பந்து போட்டிகளின் மீது ஆர்வம் கொண்ட ரசித் இங்கிலாந்து கால்பந்து அணியின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார்.ரசித் கூறுகையில், சிரியாவில் இருக்கும் போதே நான் இங்கிலாந்து அணியின் ரசிகன் தான், அந்த நாட்டுக்கே குடியேறி அந்நாட்டு அணியை ஆதரிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

கடந்த 2017-ல் இங்கிலாந்து – ஜேர்மனி அணிகள் மோதிய போட்டியை நேரில் பார்த்துள்ளேன்.இரு தினங்களுக்கு முன்னர் நடந்த இங்கிலாந்து – குரேஷியா போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறும் என மிகவும் ஆர்வமாக இருந்தேன்.

ஆனால் இங்கிலாந்து தோற்றது அதிர்ச்சியை கொடுத்தது. நானும் என் குழந்தைகளும் அழுதே விட்டோம். என்னுடைய ஒரு மகள் ஏன் இங்கிலாந்து தோற்றது என கேட்டபடி அழுதாள்.ஆனால், இன்னொரு மகள் சமாதானமாகி ஊக்குவித்தாள் எனவும் அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்