சுழிபுரம் சிறுமி படுகொலை வழக்கில் சந்தேக நபர்களின் விளக்க மறியல் நீடிப்பு!!

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் ஆறு வயது சிறுமி றெஜினா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு மல்லாகம் நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது சந்தேகநபர்கள் 3 பேரும் எதிர்வரும் 26ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ். சுழிபுரம் பகுதியில் 6 வயது சிறுமி றெஜினா கடந்த ஜூன் மாதம் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.இந்த சம்பவத்தில் 3 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்