அதிகரித்து வரும் போதைப் பொருள் குற்றங்களை கட்டுப்படுத்த 42 வருடங்களின் பின் இலங்கையில் அமுலாகும் தூக்குத் தண்டனை!!

இலங்கையில் குறிப்பிட்ட நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரன தெரிவித்துள்ளார்.

நேற்றுக் கூடிய அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதன்மூலம் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கு தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.இலங்கை வரலாற்றில் நீரில் மூழ்கடித்து கொலை செய்தல் உட்பட பல மரண தண்டனை முறைகள் காணப்பட்டாலும், முதல் முறையாக தூக்கிட்டு கொல்லப்பட்ட சம்பவம் 1812ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி பதிவாகியுள்ளது.

இலங்கையில் இறுதியாக 1976ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23ஆம் திகதி தூக்கிட்டு கொல்லப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. அது முதல் 42 வருடங்களாக தூக்குத் தண்டனை அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்