19 மரண தண்டனைக் கைதிகளுக்கு விரைவில் தூக்கு!! ஜனாதிபதி மைத்திரியின் திடீர் முடிவினால் பரபரப்பு!!

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் விபரங்களை வழங்குமாறு, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உரிய தரப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்று, அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.நாட்டில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை மீண்டும் நடைமுறைக்குகு் கொண்டு வருவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அரச தலைவரால் நேற்றுச் சமர்ப்பிக்கப்பட்டது.இதற்கு அமைச்சரவையில் முழு ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைக்காக தூக்குத் தண்டனை கைதிகளின் விபரங்கள் திரட்டப்படுகின்றன.

சிறைக்குள் இருந்தும் பிணையில் வெளிவந்தும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 19 பேர் இவ்வாறு தூக்குத் தண்டனைக் கைதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்தநிலையில், இவர்களது பெயர் விபரம் கிடைக்கப் பெற்றவுடன் தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்