பிரதி அமைச்சர் அங்கஜனுடன் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா நேரில் சந்திப்பு!!

விவசாய பிரதியமைச்சராக இன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்று பணிகளை ஆரம்பித்துள்ள அங்கஜன் இராமநாதனை, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேரில் சென்று சந்தித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விவசாய பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில் இன்று அவர் தனது பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்திருந்ததுடன், அவருக்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வும் இன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக் கொண்ட அங்கஜன் இராமநாதனை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.அத்துடன், யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என துடிக்கின்ற அங்கஜன் இராமநாதன் இந்த அமைச்சின் ஊடாக சிறப்பான பணிகளை ஆற்ற வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்