இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (இன்றைய ராசி பலன் 11.07.2018)

மேஷம்:

மாலையில் நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக வெளியூர் செல்ல நேரிடும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

ரிஷபம்:

வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை நிகழும்.

மிதுனம்:

குரு கடாட்சம் பரிபூரணமாகக் கிடைக்கும் நாள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். இன்று உற்சாகமான நாளாக இருக்கும். உற்சாகமான நாள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவு தருவார். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

கடகம்:

எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. மனம் உற்சாகமாகக் காணப்படும். இன்று உற்சாகமான நாளாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வேலையின் காரணமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

சிம்மம்:

ளiஅஅயஅசிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தாயின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.

கன்னி:

உறவினர் மற்றும் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. தந்தை வழி உறவுகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ தரிசனமும் மகான்களின் ஆசியும் கிடைக்கும்.

துலாம்:

இன்று உங்கள் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சந்திரன் விரயத்தில் சஞ்சரிப்பதால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். காரியங்கள் அனுகூலமாக முடியும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:

வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் ஏற்படக்கூடும்

தனுசு:

மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு மகான்களைத் தரிசித்து அவர்களின் ஆசிகளைப் பெறும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு திடீர்ப் பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும்.

மகரம்:

நீண்டநாள்களாக நினைத்திருந்த குலதெய்வ பிரார்த்தனையை இன்று நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

கும்பம்:

நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டாகும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம்.

மீனம்:

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சகோதரர்கள் வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளைச் செலுத்தும் வாய்ப்பு உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

அனைத்து ராசிக்காரர்களுக்கும் இன்றைய ராசி பலன் ஏதோ ஒரு விதத்தில் நன்மை அளிப்பதாக இருக்கும் என நம்புகிறோம்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்