காதலர்களை ஒன்று சேர்க்கும் சுக்கிர வழிபாடு!! காதலர்களே இப்படி வழிபடுங்கள்….!

காதலர்களை சேர்க்க, பிரிந்த தம்பதிகளை சேர்க்க, கடவுளை நம்பலாம். காதலை நிறைவேற்றுவதில் சுக்கிர பகவானுக்கு முக்கிய பங்குண்டு. காதலுக்குரிய கிரகம் சுக்கிரன்.

சுக்கிரபகவான் அசுரர்களுக்கு குருவாக இருப்பவர். இவருடைய பெயர் சுக்கிரசாரியார் என்றும், பார்க்கவன் என்றும் அழைக்கப்படுகிறார். மகிழ்ச்சிக்கும், இனிமையான திருப்திகரமான திருமண உறவுக்கும் சுக்கிரனின் அருள் அவசியம்.

அழகு, வசீகரம், பகட்டான வாழ்வு, அதிர்ஷ்டம் அனைத்துக்கும் சுக்கிரனின் பார்வையே காரணம். ஆகவே காதலில் சிக்கல் உள்ளவர்கள் சுக்கிரனுக்கு சில பரிகாரங்களை செய்தால் எளிதில் ஒன்று சேர்வார்கள் என்பது ஐதீகம்.

வெள்ளிக்கிழமை தோறும் மகாலஷ்மி வழிபாடு செய்தால் காதலில் மகத்தான வெற்றி கிடைக்கும். மாலையில் அம்பாள், அம்மன், ஆண்டாள் கோயிலுக்கு சென்று வழிபடலாம். வெள்ளிக்கிழமைகளில் லலிதா சஹஸ்ர நாமத்தை சொல்வது காதலர்களை சேர்த்து வைக்கும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்