வடக்கில் இருந்து இலங்கை தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழன்!

யாழ் இந்துவின் பழைய மாணவன் வாகீசன் இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மைந்தனும் (2008 A/L), ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் கூடைப்பந்தாட்ட வீரனுமான வாகீசன் அவர்கள் இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்காக 3 வருடங்களின் பின் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.2011 ஆம் ஆண்டு வடக்கில் இருந்து முதலாவது வீரனாக இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு தெரிவாகியிருந்தார்.

2011 தொடக்கம் 2014 வரை தொடர்ந்து 4 வருடங்கள் ( 2011, 2012, 2013, 2014 ) இலங்கை கூடைப்பந்தாட்ட அணியில் இடம்பெற்றிருந்தார்.

மீண்டும் 3 வருங்களின் பின் இவ் ஆண்டு (2018) இலங்கை கூடைப்பந்தாட்ட அணிக்காக தெரிவாகியுள்ளார்.
இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்காக வடக்கு மாகாணத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஒரே ஒரு கூடைப்பந்தாட்ட வீரன் வாகீசன் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.எதிர்வரும் 25ம் திகதி வங்களாதேசத்தில் நடைபெற இருக்கும் தென்னாசிய கூடைப்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை அணியோடு வாகீசனும் விரைவில் வங்களாதேசம் பயணமாகின்றார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்