அமெரிக்காவிடம் மாட்டிக் கொண்ட கோத்தபாய!! வெளிவராத மஹிந்தவின் நிலைப்பாடு…?

அமெரிக்காவின் சட்டங்களுக்கு கோத்தபாய ராஜபக்ச கட்டுப்பட்டாக வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அமெரிக்க தூதுவரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்தார். ஆனால் இந்த காரணிகள் குறித்து அவர் ஏன் வாய் திறக்கவில்லை.சில பத்திரிகைகளில் அவர் அமெரிக்க தூதுவரை சந்தித்ததாக செய்திகள் வெளிவந்துள்ள போதிலும் ஊடகங்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ இந்த காரணிகளை கூறாதது ஏன்?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்க பிரஜை. ஆகவே அவர் அமெரிக்க நாட்டின் தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும்.அமெரிக்க த் தூதுவர் அதுல் கேஷாப் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர் அல்ல. அவரது கூற்றுக்களை நாம் கேட்கத் தேவையில்லை என்ற காரணி சாதாரணமானது.

ஆனால் கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்க பிரஜை என்ற காரணத்தினால் அமெரிக்க தூதுவரின் கருத்தை அவர் ஏற்கத்தான் வேண்டும். அமெரிக்கா ஏதேனும் சட்டங்களை நடைமுறைப்படுத்தினால் கோத்தபாய ராஜபக்ஷ அதற்கு கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும்.சில பத்திரிகைகளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமெரிக்க தூதுவரை சந்தித்ததாக செய்திகள் வெளிவந்துள்ள போதிலும், ஊடகங்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ இந்த காரணிகளை கூறாதது ஏன்? ஆகவே அவரிடம் இது குறித்து வினவுங்கள் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார் .

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்