2026ல் உலகக் கோப்பை காற்பந்து போட்டிகளை நடத்தும் வாய்ப்பு மூன்று நாடுகளுக்கு!!

அமெரிக்கா, கனடா, மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் 2026ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை கூட்டாக நடத்துவதற்கான போட்டியில் வெற்றிபெற்றுள்ளன.இந்த மூன்று நாடுகளும் கூட்டாக அளித்த முன்மொழிவுக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் 134 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்த நாடுகளை எதிர்த்து கால்பந்து உலகக்கோப்பையை நடத்த முன்மொழிவை சமர்பித்திருந்த மொராக்கோவுக்கு 65 உறுப்பு நாடுகளே ஆதரவு தெரிவித்திருந்தன.

2026இல் நடக்கும் கால்பந்து உலகக்கோப்பை தொடரே இதுவரை நடந்த தொடர்களில் மிகவும் பெரியதாக இருக்கும். 34 நாட்கள் நடக்கும் இந்தத் தொடரில் 48 அணிகள் விளையாடும். இதில் மொத்தம் 80 போட்டிகள் நடக்கும்.அவற்றில் 60 போட்டிகள் அமெரிக்காவிலும், தலா 10 போட்டிகள் கனடா மற்றும் மெக்சிகோவிலும் நடக்கும்.

போட்டி நடக்கும் 16 நகரங்களில் 10 நகரங்கள் அமெரிக்காவிலும், தலா மூன்று நகரங்கள் கனடாவிலும் மெக்சிகோவிலும் உள்ளன.இதற்கு முன்னர் 1970 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளில் மெக்சிகோவும் 1994இல் அமெரிக்காவும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தியுள்ளன.2015இல் பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரை கனடா நடத்தியுள்ளது.இதுவரை ஐந்து முறை உலகக்கோப்பைத் தொடரை நடத்துவதற்கான போட்டியில் பங்கேற்றுள்ள மொராக்கோ ஒரு முறைகூட வென்றதில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இதனையும் பாருங்கள்….

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிகள் ரஷ்யாவில் இன்று ஆரம்பம்!!

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்