உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிகள் ரஷ்யாவில் இன்று ஆரம்பம்!!

சர்வதேசமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஃபிபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடர் இன்று (வியாழக்கிழமை) ரஷ்யாவில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. ஜுலை 15ஆம் திகதி வரை 11 நகரங்களில் 12 நவீன கால்பந்தாட்ட அரங்குகளில் இப்போட்டி நடைபெறவுள்ளது.இதற்கான ஏற்பாடுகளை போட்டி ஏற்பாட்டுக் குழு தயார்படுத்தியுள்ள நிலையில், நேற்று ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் சிவப்பு சதுக்கத்தில் சிறப்பு இசை நிகழ்ச்சியொன்றும் நடத்தப்பட்டுள்ளது.

ஃபிபா உலகக்கிண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரம்மாண்டமான அமைக்கப்பட்ட மேடையில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஃபிபா தலைவர் ஜியானி இன்ஃபின்டீனோ (Gianni Infantino) உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Goal Symphony என்ற தொனியிலான இந்த இசை நிகழ்சியில், ரஷ்ய பாரம்பரிய இசையுடன் கூடிய பாடல்களும் பாடப்பட்டன.

உலகக் கிண்ண தொடரை கண்டுகளிக்க பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் ரஷ்யாவுக்கு படையெடுத்துள்ளதோடு, உலகின் பல பாகங்களில் பிரம்மாண்ட திரைகளில் போட்டிகளை கண்டுகளிக்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்