வெளிநாட்டு மோகத்தால் பத்தொன்பது இலட்சம் ரூபாயை பறிகொடுத்த நபர்கள்

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பத்தொன்பது இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த நபர் ஒருவரை இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் நேற்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.மக்களடி வீதி, வாழைச்சேனை,பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை ஜேர்மனி நாட்டுக்கு அனுப்புவதாக கூறி மூதூர் பகுதியிலுள்ள இருவரிடம் பத்தொன்பது இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், ஒருவரிடம் பத்து இலட்சம் ரூபாவும், மற்றொருவரிடம் ஒன்பது இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை, சந்தேக நபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்