பிரித்தானிய மகாராணியின் கரங்களினால் விருது பெறும் இலங்கைப் பெண்மணி..!!

பிரித்தானிய மகாராணி எலிசபெத்திடம் இருந்து இலங்கை பெண்ணான பாக்கியா விஜயவர்த்தன விருது பெறவுள்ளார்.சமூகத்தில் நாட்டில் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபடும் இளம் தலைமுறையினருக்கு ‘மகாராணி இளம் தலைவர் விருது’ வழங்கப்படும்.பொதுநலவாய நாடுகளை சேர்ந்த இளம்தலைமுறையினருக்கு வழங்கப்படும் இவ்விருதை இலங்கை பெண்ணான பாக்கியா விஜயவர்த்தன பெறவுள்ளார்.

வருகிற 26ம் திகதி பக்கிங்காம் அரண்மனையில் நடைபெறும் இவ்விழாவில் எலிசபெத் மகாராணி விருது வழங்கவுள்ளார்.உணவுப் பாதுகாப்பை மக்களிடம் ஊக்குவித்த காரணத்திற்காக இவ்விருது வழங்கப்படவுள்ளது.

இவர் வீட்டுத் தோட்டத்தில் இருந்து உணவுப்பொருட்கள், காய்கறி மற்றும் பழவகைகளை உற்பத்தி செய்யுமாறு பொதுமக்களை தூண்டி வந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்