இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன்…(11.06.2018)

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிரு ப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.ரிஷபம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடி வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மிதுனம்: வீரியத்தை விட காரியம் தான் பெரிது என்பதை உணருவீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். அலுவலகத்தில் மதிப்புக் கூடும். பெருந் தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

கடகம்: உங்களின் அணுகுமு றையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி யமைத்துக் கொள்வீர்கள். பழைய உறவினர்இ நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

சிம்மம்: குடும்பத்தில் கலக லப்பான சூழல் உருவாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

துலாம்: தன் பலம் பலவீனத்தை உணர் வீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை கைக்கூடி வரும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளி ப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

தனுசு: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

மகரம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடிவடையும். நட்பு வட்டம் விரியும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பி றந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.

மீனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். மனநிறைவு கிட்டும் நாள்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்