சோகமயமானது முள்ளிவாய்க்கால் – மண்ணில் புரண்டு கதறி அழுத உறவுகள்!!-

முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகிய இன்று யாழில் ஈகைச்சுடரேற்றப்பட்டு உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுகின்றது.காலை 11 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வழங்க இறுதிப் போரில் தனது உறவை இழந்த சகோதரி ஒருவரால் ஈகைச் சுடரேற்றப்பட்டு நினைவேந்தல் ஆரம்பமானது.

உறவுகளை இழந்து தவிக்கும் பொது மக்கள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், கண்ணீர் விட்டு அழும் காட்சி அங்கிருப்பவர்களின் மனதை நெகிழ வைத்தது மதத் தலைவர்களின் வழிபாடுகளும் நடைபெற்றுள்ளன. ஈகைச்சுடரை சுற்றி பொதுமக்கள் குவிந்திருந்தனர்.

வழமையாக முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கும் போது வெயில் மக்களை சுட்டெரிக்கும்.ஆனால் இம்முறையோ இயற்கையும் தனது வழக்கத்தை மாற்றியுள்ளது என்று தோன்றுகின்றது. சுட்டெரிக்கும் சூரியன் கூட இந்த மக்களைக் கண்டு மனமிறங்கி தனது அக்கினிக்சுவாலைகளை குறைத்துள்ளதாகவே தோன்றுகின்றது. இறுதிப் போரில் உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பொது மக்களுக்கு ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 4 வருடங்களில் இல்லாத அளவுக்கு பொதுமக்கள் நினைவேந்தலுக்கு வந்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்தும் மாணவர்களின் பேரணி ஒன்று முள்ளிவாய்க்கால் முற்றத்தை வந்தடைந்தது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்