யாழ் பல்கலை மாணவர் உந்துருளிப் பேரணி முள்ளிவாய்க்கால் நோக்கிப் புறப்பட்டது!

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை எழுச்சி மிக்கதாக்கும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நோக்கிய உந்துருளிப் பேரணி சற்று முன்னர் யாழ்ப்பாணத்தி லிருந்து புறப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் இருந்து ஆரம்பித்த இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் உந்துருகளோடு கலந்து கொண்டனர். ஏனைய பல மாணவர்களும், பொதுமக்களும் பஸ்களில் முள்ளிவாய்க்கால் நோக்கிப் பயணமாகியுள்ளனர்.

இன்று காலை 11 மணிக்கு முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள பொது நிகழ்வில் இந்தப் பேரணி கலந்து கொள்ளும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்