128 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட பயங்கரம்!! விமானி செய்த அதிசயச் செயல்!!

சீனாவில் சாங்குயிங் நகரில் இருந்து திபெத்தின் லாசாவுக்கு சிசுவான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு பயணிகள் விமானம் 128 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, விமானம் 32 ஆயிரம் அடி (9800 மீட்டர்) உயரத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. மணிக்கு 800 முதல் 900 கி.மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில் விமானிகள் அறையான காக்பிட்டில் துணை விமானி இருக்கையின் அருகே கதவு பாதி அளவு திறந்தது. இதனால் விமானத்திற்குள் காற்று புகுந்தது. எனவே காற்றை தடுத்து நிறுத்தும் கருவி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால், விமானி லியூ சுயாங் ஷியான் உஷாரான விமானி விமானத்தை சிசுயான் மாகாணத்தில் உள்ள செங்கு விமான நிலையத்திற்கு கொண்டு சென்று விமானத்தை பத்திரமாக தரை இறக்கியுள்ளார். அதன் மூலம் 128 பயணிகளும் உயிர் தப்பியுள்ளனர்.

இதனால், விமானி லியூ சிசுயானை பயணிகளும், அதிகாரிகளும், சமூக வலைதளங்களில் நெட்டிசன்களும் பாராட்டி வருகின்றனர். இதற்கு முன்பு இவர் சீன விமானப் படையில் விமானிகளின் பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்