நிழல் இல்லாத நாள்…. சென்னையில் நடந்த அதிசயம்!!

அறிவியலாளர்களால் பூஜ்ஜிய நிழல் அல்லது நிழல் இல்லா நாள் என கூறப்படும் அதிசய நாள் நேற்று சென்னையில் நிகழ்ந்தது.பூஜ்ஜிய நிழல் நாளில் நிழலானது வழக்கமாக விழும் நிழலை விட வித்தியாசமானதாக இருக்கும். அதாவது மற்ற நேரங்களில் சிறிது பக்கவாட்டில் விழும் நிழல் சரியாக நேராக விழும். இதற்கு சூரியனின் கதிர்கள் பூமியின் பூமத்தியரேகையின் மீது சரியாக விழுவது தான் காரணம். சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுவதால் நிழலானது பொருளை விட்டு விலகிச் செல்லாமல் நேராக விழிகிறது. வழக்கமாக சூரியன் வடகிழக்கு அல்லது தென்கிழக்கில் உதிக்கும்.ஆனால், இந்நாளில் சூரியன் சரியாக கிழக்கில் உதித்து மேற்கில் மறையும்.இந்த இயற்கை அதிசயம் ஆண்டிற்கு இரண்டு முறை மட்டுமே நடைபெறும். இந்நாள் ஆண்டுதோறும் சென்னையில் ஏப்ரல் 24 மற்றும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி நிகழும். நேற்று சென்னையில் நிகழ்ந்த அதிசயத்தை அதனை அனைவரும் கண்டு ரசித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்